( MOHAMED JUNAIDENN sainthamaruthu )
இன்று சாயிந்தமருது வாக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைகாது என சமுகவலைத்தளங்களில் பேசப்படுகின்றது.
அது எந்த அளவு சாத்தியமாகும் ???? சாயிந்தமருது வாக்கு பிரிய இவர்கள் கூறும் காரணம் மூன்று தான் ..
01 சிறாஸ் மீராசாஹிப் பிரிவு
02 ஜெமீலின் பிரிவு
03 சாயிந்தமரு உள்ளூராட்சி மன்ற கோரிக்கை
இந்த மூன்றும்தான் தான் இவர்கள் கூறும் மிகப்பெரிய காரணம்.
இது எந்த வகையில் சாந்தியமாகும் ???
கல்முனை தொகுதியில் உள்ள அரசியல் வாதிகளுக்கென்று ஒரு வாக்கு வங்கி இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அத்தோடு கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும் முன்னால் பிரதி அமைச்சர் கௌரவ நிஜாமூடீன் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை விட்டு பிரிந்தார். இதனால் சாயிந்தமருதில் முஸ்லிம் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை விட்டு பிரிந்தார் 2004 ஆண்டு அப்போதும் கூட கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எந்த பாதிப்புமில்லை. இதில் இருந்து ஒன்று நமக்கு நன்றாக விளங்க வேண்டும் கல்முனை தொகுதியில் உள்ள அரசியல் வாதிகளுக்கென்று ஒரு வாக்கு வங்கி இல்லை இவர்கள் கட்சி மாறுவதால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்புமில்லை.
இரண்டாவது கருத்து உள்ளூராட்சி மன்றம்
சாயிந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை முன்னால் அமைச்சர் கௌரவ அதாவுல்லா அவர்கள் வழங்க போவதாக கூறிய போது அதை முதலில் எதிர்த்தவர்கள் சாயிந்தமருது மக்கள்.
இதற்கு இரண்டு ஆதாரம் உண்டு
இதற்கு இரண்டு ஆதாரம் உண்டு
சாயிந்தமருது வர்த்தக சங்கத்தோடு முன்னால் அமைச்சர் அதாவுல்லா சாயிந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக தெளிவுபடுத்திய போது வர்த்தக சங்கம் அதை எதிர்த்து கருத்துக்கள் தெரிவித்தார்கள். இது நடந்தது இலியாஸ் அவர்களின் வீட்டில்.
இரண்டாவது தடவையாக கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாடி சுமார் 5 அல்லது 6 நாட்களுக்கு முன்பு சாயிந்தமருதில் மக்கள் சந்திப்பொன்றை முன்னால் அமைச்சர் அதாவுல்லா ஏற்பாடு செய்திருந்தார்.அந்த மக்கள் சந்திப்பின் போது சாயிந்தமருது உள்ளூராட்சி விடயம் சம்மந்தமாக அதாவுல்லா சேர் பேசும் போது நம்பிக்கையாளர் சபையின் மூன்று உறுப்பினர்கள் அதை எதிர்த்து கருத்து தெரிவித்தார்கள் அப்போது அங்கு இருந்த மக்கள் நம்பிக்கையாளர் சபைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.
அதற்காக சாயிந்தமருது மக்கள் தனக்கான உள்ளூராட்சி மன்றத்தை தேவையில்லை என்று சொல்லவில்லை.
சாயிந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை கட்டாயம் பெற வேண்டும் அது முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே பெற என்பதுதான் இன்றய சாயிந்தமருது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவேதான் தமக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற வேண்டும் என்று இருக்கும் மக்கள் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்காளிப்பார்கள் ???? இது இவர்களின் அரசியல் மடமை என்றுதான் கூற வேண்டும்.
சாயிந்தமருதில் உள்ள 14000 வாக்குகளில் 9000 தொடக்கம் 10000 வரை முஸ்லிம் காங்கிரசுக்கு அழிக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் கல்முனை மக்களை எதிர்த்தோ அல்லது பகைத்தோ தனக்கான உள்ளூராட்சி மன்றத்தை சாயிந்தமருது மக்கள் பெற மாட்டார்கள்.

