(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனையில் புதிதாக “இமாம்” என்ற பெயரில் விளையாட்டுக் கழகம் ஒன்று நேற்று (08) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ் அங்குராரர்ப்பண நிகழ்வு கல்முனைக்குடி அல்-மிஸ்பாஹ் வித்தியாலயத்தில்
உத்தியோகபூர்வமாக கல்முனை பிரதேச செயலக உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக றினோஸ் ஹனீபா குறிப்பிடும்போது,
விளையாட்டுக் கழகத்தில் உள்ளவர்கள் விளையாட்டுத் திறனை வெளிக் கொண்டுவருவது போல மற்றவர்களை மதிக்கக் கூடிய பண்பாடுகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும். அத்துடன் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும் தங்களிடத்தில் வளர வேண்டும் என குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கழகத்தின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஆசிரியர்
றிபான் அவர்களும் கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.