(க.கிஷாந்தன்)
ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்வெல தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர், அட்டாம்பிட்டி வைத்தியசாலையில் 20.07.2015 அன்று திங்கட்கிழமை பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தோட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக, குளவி கூடொன்று கலைந்து, கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களின் 8 பெண்களும் 6 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



