Ariram Panchalingam
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது.
யாப்பஹூவ – எகொடகம பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதன் போது அடிமைகள் போன்று இருந்த நாம் சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் எனவும் நாட்டை பிளவுபடுத்த மீண்டும் முயற்சித்தபோது அதனை ஐக்கியப்படுத்தினோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ கருத்துத்தெரிவித்தார்.
மேலும் இந்த 100 நாட்களுக்குள் இல்லாமல்போன விடயங்கள் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் நிறுத்தப்பட்ட அனைத்தையும் 18 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் நாம் ஆரம்பிப்போம் எனவும் மஹிந்த தெருவித்தார்.

