(அஸ்ரப் ஏ சமத் -
மாளிகாவத்தையில் உள்ளஅப்பில் தோட்த்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருடகாலமாக முடுக்கு வீடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இக் குடும்பங்கள் பலகை வீடுகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்கின்றனர்;

உலகிலே பாரிய வளர்ச்சிகண்ட நகரமாக கொழும்பு அபிவிருத்தி கண்டாலும் மாளிகவாத்தையில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பரம்பரை பரம்பரையாக முடுக்கு வீடுகளிலேயே வாழ்கின்றனர்.
இந்த சமுகத்தின் வாழ்வாதார வீட்டுப் பிரச்சினையை எந்த வொரு அரசியல் வாதியும் தீர்வுபெற்றுத் தரவில்லை.
நாங்களாகவே வீடொன்றைக் கட்டிக் கொள்ள வசதியில்லாமல் இருக்கின்றோம்.யாராவது உதவவந்தாலும் கொழும்பில் பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களது மலசல கூடத்தைக் கூடக் நிர்மாணிப்பதென்றாலும் நகர அபிவிருத்தி அதிகார சபை,கொழும்பு மாநகரசபைகளில் அனுமதிஎன்ற போர்வையில் எங்களை இந்தபாதாள உலக யுகத்திற்கே எங்களையும் எங்களது பரம்பரையினரையும் இட்டுச் செல்கின்றனர். எனஅப்பிரதேசகுடியிருப்பு பென் கண்கலங்கி கூறுகின்றார்.
என இன்றுஅகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபமுன்னணியின் தலைமையமான நாரேகேண் பிட்டியில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் முன்ன்ணியின் உப தலைவர் பாருக்,பொருளாளர் சாம் நாவாஸ் மாளிகாவத்தை முஸ்லீம் லீக் தலைவர் எம். இசாக் ஆகியோறும் கருத்துதெரிவித்;தனர்.
இம்மக்கள் இம்முறை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதிக்காக 95 வீதமாகவாக்களித்தவர்கள். புதியபிரதமர் வீடமைப்பு மற்று நகரஅபிவிருத்தி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோதிலும் ;இப்பிரதேச மக்கள் தமக்கென வீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்திலும் வாழ்கின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் நாளாந்தம் ,சமுக,பாதுபாப்பின்மை,குற்றங்கள்,போதைப்பொருள் போன்றவற்றிக்கு இப்பிரசத்தில வாழும் குடும்பங்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்
இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இப்பிரதேசத்திலேதொடர்மாடிவீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கபபடுகின்றன,எதிர்காலத்திலும் நிர்மாணித்து இம்மக்களைகுடி யேற்றுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
25 அடிகொண்ட பலகை,சிறுவீடுகளுக்குள் 3 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒருகுடும்பம் வீதியில் அல்லது பாதையோரத்தில் இருக்க இன்னொரு குடும்பம் உள்ளே தூங்குகின்றனர். அவர்கள் காலை எழுந்து தொழிலுக்குச் சென்றவுடன் மற்றையகுடும்பம் தூங்குகின்றனர். உரியவடிகான் வசதியின்றி மழைகாலங்களில் இந்த வீடுகளில் நீர்தேங்கிநின்று எங்களது பிள்ளைகளை வைத்தியசாலைகள் அனுமதித்த சம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன
.
பெண்பிள்ளைகளை பாதுகாப்பது மிகவும் கஸ்டமாகஉள்ளது. பாடசாலை சிறுவர்கள் தமதுகல்வியை இடைநடுவில் விடுகின்றனர்;. கடந்தஅரசாங்கம் இங்குவாழ்ந்த 125 குடும்பங்களுக்கு பொரளையில் தொடர் மாடிவீடுகளில் குடியமர்த்தினார்கள். ஏனைய மிகுதியான 1200 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த கஸ்டங்களைஅனுபவிக்கின்றனர்.
இவர்களுக்கு உரியதொடர் மாடிவீடுகளை அமைத்து கொடுக்குமாறு இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வினயமாககேட்கின்றோம்.
மறைந்த ஜனாதி பதிரணசிங்க பிரேமதாச நிர்மாணித்த வீடமைப்புத்திட்டத்திற்கு பிறகு கடந்த 30 வருடங்களுக்கு பிறகு எந்தவொரு அரசாங்கமும.தொடர் மாடிவீடமைப்புத் திட்டமும் மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை.
இதுவரை இந்த புதிய அரசாங்கமோ நகரஅபிவிருத்திஅதிகார சபை அதிகாரிகளோ இம் மக்களதவாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாக வந்துபார்வையிடவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையில் ஏற்கனவே பல்வேறுதிட்டங்கள் வகித்தபோதிலும் அவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள சிலதிட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகினற்ன.
அவற்றிலாவது எங்களை குடியமர்த்துக்கள் எனஅம்மக்கள் வினயமாககேட்கின்றனர். மாளிகாவத்தையில் பிறந்து வளர்ந்த மக்களை மாளிகாவத்தையிலேயே குடியமர்த்துக்கள். இல்லாவிட்டால் கொழும்பு மத்தியதொகுதி முஸ்லீம் பெரும்பாண்மையாகக் கொண்டஒருதொகுதி இந்த கொழும்பு மாவட்டத்;தில் இல்லாமல் செய்து விடுவார்கள் எனவும் அங்கு கூறப்பட்டது.