Advertisement

Main Ad

அம்பாரை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம்... photos



asraf kan





அம்பாரை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் நேற்று (10) காலை அம்பாரை மணிக்கூட்டு கோபுரத்திற்குமுன்னால் ஆரம்பித்தது.

இங்கு ஒன்று கூடிய  வெளிக்கள உத்தியோத்தர்கள்   அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கில்கள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்எனும் கோரிக்ககையை முன்வைத்துபதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தினை தொடங்கினா்.

இந்த ஆர்ப்பாட்டம் அம்பாரை பிரதான வீதி ஊடாகச் சென்று அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முடிவடைந்ததுஇங்கு சேர்ந்தவெளிக்கள உத்தியோகஸ்த்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தங்களுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி மகஜா் ஒன்றையும்கையளித்தனா்.

அரசே ! விவசாய போதனாசிரியர்களுக்கு சைக்கில் கொடு, அரசே ! விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அநீதி வேண்டாம், அரசே ! அம்பாரை மாவட்டத்திற்கு பாரபட்சம் காட்டாதே, கஷ்டப் பிரதேசங்களில் கடமை புரியும் அம்பாரை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள் பெற நாதியற்றவர்களா ?இலவசம் என்றீரே காசுக்கும் இல்லையே என்பன போன்ற பல வாசகங்களுடன் பதைாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்