(எம்.எம்.ஜபீர்)
பொது நிர்வாக
உள்நாட்டிலுவல்கள் அமைச்சினால் அம்பாரை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த
கிராம சேவை உத்தியோகத்தர் தெரிவுப் போட்டியில் சிறந்த கிராம சேவை
உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவு அன்னமலை - 02 கிராம சேவை
உத்தியோகத்தர் பீ.அலெக்ஸ்சான்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை
இரண்டாம் இடத்தை திருக்கோயில் பிரதேச செயலக பிரிவு தம்பிலுவில் - 02 கிராம
சேவை உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் பெற்றுள்ளதுடன், மூன்றாம் இடத்தை தமன
பிரதேச செயலக பிரிவு முறக்காபில் கிராம சேவை உத்தியோகத்தர்
கே.எம்.சுதர்சினி பெற்றுள்ளார்.
அம்பாரை மாவட்டத்தில்
நடாத்தப்பட்ட சிறந்த கிராம சேவை உத்தியோகத்தர் தெரிவுப் போட்டியில் வெற்றி
பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (17) அம்பாரை மாவட்ட
செயலக நிர்வாக உத்தியோகத்தர் சிறியானி பத்மலத்தா தலைமையில் நாவிதன்வெளி
அன்னமலை பல்தேவைக் கட்டித்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை
மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வனிகசங்க, மேலதிக அரசாங்க அதிபர்
எஸ்.விமலநாதன், உதவி அரசாங்க அதிபர் சிந்தக்க உதய நாணயக்கார, நாவிதன்வெளி
பிரதேச செயலாளர் எஸ்.கரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கிராம சேவை
உத்தியோகத்தர்கள் என மேலும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாரை மாவட்டத்திலுள்ள மேலும் 28 சிறந்த கிராம சேவை உத்தியோத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.