Advertisement

Main Ad

கிம்மா நிறுவனத்தின் 5 ஆண்டு பூர்த்தி கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னொடுப்பு (படங்கள்)


( எம்.ரீ.எம்.பாரிஸ் )

மட்டக்களப்பு அல்-கிம்மா நிறுவனத்தின் 5ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கல்வி, கலை கலாசார நிகழ்ச்சிகள் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய (சாட்டோ) மைதானத்தில் இடம் பெற்றன.



இதன் போது பொதுமக்களின் நலன் கருதி அனர்த்தம் மற்றும் விபத்து, மரணம் ஏற்படும் சந்தர்பங்களின் போது முதலுதவிச் சேவையினை வழங்குவதற்காக இலவச அம்பியுலன்ஸ் வண்டியொன்று அறிமுகம் செய்யப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், விவசாய ஆக்கத்திறன் மற்றும் கண்காட்சி, இலவச மூக்குக்கண்ணாடி விநியோகம், முதலுதவிக் கண்காட்சிகள், அறபு நாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் அங்கு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளில் ஏராளமான இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சவூதியரேபியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ் ஸபிஈ, இலங்கை நாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி), மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி மற்றும் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கிடையிலான விவாதம், கவிதை, பேச்சு, அல்-குர்ஆன் மனனம் போன்ற போட்டிகளும் நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப்பரிசில்கள், நினைவுச்சின்னங்கள், வெற்றிப் பதக்கங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வானது இரண்டு நாட்கள் மிகவும் விமர்சையாக நடை பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.