எதிர்வரும்
பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக
போட்டியிட இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராகவோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனுவோ அல்லது தேசியப் பட்டியலோ வழங்கப்படமாட்டானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
எனவே மஹிந்த ராஜபக்ஷ தற்போது வீட்டில் இருப்பதே நல்லது. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் அமைச்சராகவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார். இதற்கு மேல் அவருக்கு என்ன வழங்க வேண்டும்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முன்னாள் பிரதமர்கள் இருவர் ஆகியோரை ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சியை வளர்ப்பதற்கு உதவிகளையும் ஆலோசனைகளை வழங்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நாட்டை சர்வதிகாரத்தில் இட்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆட்சி போன்று நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.