(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை ஜூனைற்றி விளையாட்டுக்
கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து
கிறிக்கட் போட்டியில் சம்மாந்துறை லைட்னிங் விளையாட்டுக் கழகம் சம்பியனாக
தெரிவானது.
அணிக்கு 7 பேர்களைக் கொண்ட 5
ஒவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று
சம்மாந்துறை அல்-அர்சாத் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் ஜூனைற்றி
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ஆஷிக் தலைமையில் நடைபெற்றது.
நாணயச்
சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய ரியல்நஜா
விளையாட்டுக் கழகம் 5 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 40 ஒட்டங்களை
பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லைட்னிங் விளையாட்டுக்
கழகம் 4.1 ஒவர்கள் நிறைவில் குறித்த இலக்கையடைந்து 6 விக்கட்டினால்
வெற்றியை தனதாக்கி கொண்டது.
இந்நிகழ்வில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர்
பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், அல்-அர்சாத் முஸ்லிம் வித்தியாலய பழைய
மாணவரும் மாஹிர் பவுண்டேசன் அலுவலக இணைப்பாளருமான எம்.ஜெ.எம்.இர்பான்,
விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு
வெற்றியீட்டிய கழகத்திற்கான சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.