Advertisement

Main Ad

மியன்மார்: கொகாங்க் ஆயுதக்குழு போர்நிறுத்தம்



மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவினர் (ஆவணப்படம்)
மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவினர் (ஆவணப்படம்)
மியன்மாரின் அரச படைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் கோகாங்க் பிராந்திய ஆயுதக்கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையான போர்நிறுத்த அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.
இனரீதியாக, சீனர்களான இந்த ஆயுதக்குழுவினர் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் மியன்மாரின் தேசியத் தேர்தலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மியன்மார் சீன எல்லைப்பிராந்தியத்தில் இந்த ஆயுதக்குழுவுக்கும் மியன்மார் அரச படைகளுக்கும் இடையில் கடந்த பலமாதங்களாக கடுமையான சண்டை நடந்து வந்தது.
மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்பு
மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்பு
இந்த சண்டை சிலசமயம் எல்லைதாண்டி சீனாவுக்குள்ளும் சென்றதால் சீன அரசாங்கம் கோபமடைந்தது.
சீனாவிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்தே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக, கொகாங்கியர்கள் தெரிவித்துள்ளனர்.