Advertisement

Main Ad

மாளிகா விருது விழா – 2015 ' எனும் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு




Mohamed Jafeer Mahroof


மாளிகைக்காடு மாளிகா அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ' மாளிகா விருது விழா – 2015 ' எனும் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்  2015.06.12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.04.00 மணிக்கு மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
 
மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த.சாதாரண தரத்தில் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவி, அரபுக் கலாசாலைகளில் கல்வி கற்று அல்-ஹாபில் மற்றும் அல்-ஆலிம் பட்டங்களைப் பெற்ற மாணவர்கள்இ பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிவாசல் பணிகளில் நீண்டகாலம் சேவையாற்றியவர் என 13 பேர் இவ்விழாவில் விருது, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.
 
மாளிகைக்காடு மாளிகா அபிவிருத்திச் சபையின் தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெறவுள்ள ,வ்விருது விழாவில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாகவும், காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஓய்வுபெற்ற கல்வியியலாளர் எம்.சி.ஆதம்பாவா, சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்-இய்யதுல் உலமா சபை தலைவர் யு.எல்.எம்.காசிம்(கியாதி) ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவிருப்பதாக மாளிகா அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.எச்.நாசர் தெரிவித்தார்.