Advertisement

Main Ad

எனது ரன் அவுட் திருப்பு முனை: தோல்வி குறித்து டி வில்லியர்ஸ் கருத்து

உலகக்கோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவை முதன்முதலாக வெற்றி கண்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறும்போது, ‘‘நாங்கள் நல்ல நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்போது எனது ரன் அவுட் நிகழ்ந்தது. இதுவே எங்களை தோல்வி நோக்கி இழுத்துச் சென்றது. இந்தியா ஒரு கட்டத்தில் 350 ரன்களை தொடும் என்ற நிலைமை இருந்தது. இதை எங்கள் பவுலர்கள் தடுத்தார்கள்.

275 ரன்கள் வரை இந்த ஆடுகளத்தில் துரத்தலாம். ஆனால் இந்திய வீரர்கள் 307 ரன்கள் குவித்தனர். எங்களது பேட்டிங் வரிசையை மாற்றி அமைப்போம். டாஸ் வென்று பேட்டிங் செய்ய விரும்பினோம். கடுமையான வெயில் காரணமாக எங்கள் வீரர்கள் சிரமம் பட்டனர். ஆனால், காரணம் காட்டமுடியாது’’ என்றார்.