Advertisement

Main Ad

(வீடியோ),கல்குடாவில் பிரதி அமைச்சர் அமீர் அலியை எதிர்த்து களமிறங்குவது சம்பந்தமாக DR.முஸ்தபா அதிரடி பேட்டி…

 ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ 01 Dr.முஸ்தபாவின் பேட்டி:-



 வீடியோ 02 Dr.முஸ்தபாவின் பேட்டி:-






இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்ச்சி பீடத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்த மக்கள் நாட்டில் ஆட்ச்சி மாற்றம் ஏற்பட வேண்டு என்பதில் சிறுபான்மை மக்களுடன் கைகோர்த்த பெரும்பான்மை மக்களும் இறுதியில் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புது வருகையினை ஒருமித்த குரலுடன் ஆதரித்து குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் சகலவிதத்திலும் அதிகாரத்தை தன்வசம் வத்திருந்த  மஹிந்த அரசாங்கத்தை வீட்ட்டுக்கு அனுப்பியதுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் மைத்திரிபால சிறிசேனவை ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உருவாக்கினார்கள்.

இவ்வாறு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு கல்குடா மக்கள் மிகவும் அர்ப்பனிப்புடன் செயற்பட்டு வரலாற்றில் என்றும் இல்லாதாவாறு வாக்களித்திருந்தமைக்கு தேர்தலின் இறுத்திக் காலகட்டத்தில் தற்போதைய சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் அமீர் அலியின் கட்ச்சி மாற்றத்துடனான திடீர் முடிவோடு எதிரணிகளின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தமையானது மிக முக்கிய காரணமாகவே கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் மட்டுமல்லாது மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசத்திலும் பார்க்கப்படுகின்றமை மறுக்க முடியாத உண்மையே. ஆனால் அரசின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் பிற்பாடு உடனடியாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்ற அதிமேதகு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி கல்குடா முஸ்லிம் பிரதேசத்தை மையமாக வைத்து இழக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காக களமிறக்கப்பட உள்ளதாக பல புதுமுகங்களின் பெயர்கள் தற்போதைய கல்குடாவை பிரதிநிதித்துவப் படுத்தும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சமூர்த்தி வீடமைப்பு அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு எதிராக சிதறியடிக்கப்பட்ட வன்னம் இருப்பதானது அன்றாடம் பேசப்படும் செய்தியாக கல்குடா பிரதேசத்தில் நாளாந்தம் காணக்கூடியதாக உள்ளது..

இந்த அடிபடையில் விரிவுரையாளர் நாசர், வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா,, எம்.ஜே.எம்.நெளசாத், செரன்டிப் கணக்காளர் சகோதரர் றியால், சடத்தரனி மாஹிர் ஆகியோரின் பெயர்கள் நாளுக்கு நாள் கல்குடா மூலை முடுக்களில் எல்லாம் சிதறியடிக்கப்பட்டவாறே காணப்படுக்கின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் மேற் குறிப்பிடப்பட்டவர்களில் விரிவுரையாளர் நாசர், வைத்தியர் முஸ்தபா ஆகியோரின் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கல்குடாவின் தற்போதைய தலைமையும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ் அமீர் அலிக்கு எதிராகாக பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்டு கல்குடாவின் பாராளுமன்ற பிரதிநித்திதுவம் பாதுகாக்கப்பட உள்ளதாக கூறப்படுக்கின்றது. இது சம்பந்தமான  உண்மை நிலையினை இணைய நாளிதல் வாசகர்களுக்காகவும்  கல்குடா மக்களுக்காகவும் அறிந்து கொள்வதற்காக  வைத்தியர் முஸ்தபாவை சந்தித்து பல கேள்விகளை தொடுத்த போது அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு…….



அஹமட் இர்ஸாட்:- அன்மைக் காலமாக கல்குடா பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்தி தாங்கள் பாராளுமன்ற தேர்தலில் கலமிறக்கப்படவுள்ளதாக கூறப்படுக்கின்றது. இதன் உண்மை நிலை என்ன? அவ்வாறு உண்மையானால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வரும் வைத்தியரான நீங்கள் உங்களுடைய பாதையை மாற்றிக்கொள்வதற்கான காரணம் என்ன?

Dr.முஸ்தபா:- நாட்டில் இப்பொழுது தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றம் பிராந்திய அரசியலிலும் மாற்றத்தை கொண்டுவரும் என்பது உண்மை. அதனடிப்படையில் நாட்டின் தலைமை மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பாராளுமன்றத்திலும் தகுதி உள்ள ஒழுக்கமுள்ள  அறிவுள்ள மணிதர்களை அனுப்ப வேண்டியுள்ளதாக அன்மையில் முக்கிய பாரளமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். இந்த வகையில் புதுமுகங்களின் பெயர்ப் பட்டியலில் எனது பெயர் மூன்றாம் இடத்திலேயே உள்ளது. மற்றையது மக்கள் இப்போது புத்திசாலித்தனமான முறையில் சிந்திக்க தொடங்கியுள்ளர். எவ்வாறென்றால் ஏற்கனவே இருக்கின்ற அரசியல் கலாச்சாரத்தை கைவிட்டு புதுமுகங்களை அரசியலுக்கு கொண்டுவந்து அரசியலை சுயநிர்னயம்மிக்க நல்ல அரசியல் தலைமையின் கீழ் நாகரீகமான அரசியலாக மாற்றி அடாவடித்தனத்தையும்  றெளடித்தனத்தையும்இ ஏற்கனவே நடக்கின்ற பட்டாசு கொழுத்தி நாடத்துகின்ற அரசியலுக்கும் பதிலாக சிறந்த புதுமுகங்களை நிறுத்தி அமைதியானஇ ஜனநாயக இரீதியான  நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் மாற்றமாகவே இதனை தான் பார்க்கின்றேன்

அஹமட் இர்ஸாட்:- எந்த கட்ச்சியில் களமிறங்குவீர்கள்? முஸ்லிம் காங்கிரசியல் களமிறங்குவீர்களானால் பாராளுமன்றம் செல்ல முடியுமா?  பல தடைவைகள் முஸ்லிம் காங்கிரசினால் கல்டாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும்  காங்கிரசினால் திட்டமிடப்பட்டு கல்குடாவில் பலர் ஒரே தேர்தலில் களமிறக்கப்பட்டு பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள பல சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இருக்கத்தக்க நிலையிலும் முஸ்லிம் காங்கிரசில் நீங்கள் களமிறங்கினால் கல்குடாவின் பிரதிநித்துவம் பாதுகாக்கப்படுமா?

Dr.முஸ்தபா:- நாங்கள் இறங்கியுள்ள இந்த போராட்டம் அல்லது மீண்டும் தமது பாராளுமன்ற பிரதிநித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவானது தான் 15 வயதாக இருக்கும் போதே கல்குடா பிரதேசத்தின் அனைத்து அபிவிருத்திகளும் முக்கியமாக கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவைகளை இப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பல கொள்கைத் திட்டமிடல்களை முன்னின்று உறுவாக்கி மர்ஹூம் மிகைதீன் அப்துல் காதரிடம் சமர்பித்த ஒரே ஒரு சந்ததி என்பதில் பெறுமகிழ்ச்சி அடைகின்றோம். அதே போன்று தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் பலரை அறிமுகப்படுத்தி கொடுத்தவர்களும் நாங்கள்தான். அந்த அடிப்படையில் யார் புதுமுகமாக வந்தாலும் சரி எங்களிடத்தில் ஒற்றுமை உறுவாக்கப்பட்டு எமது பிரதிநித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் எமது கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை இம்முறை தக்கவைத்துக் கொள்வதில் எவ்வாறான காய் நகர்த்தல்களை முன்னெடுப்பது என்ற விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

எந்த கட்ச்சியில் போட்டியிடுவது என்பது அல்ல இங்கு பிரச்சனை. அரசியல் நாககரீகமானதும்  பழிவாங்கள் அற்றதும்  சமூகத்துடன் ஒன்று சேர்ந்து கைகோர்த்துச் செல்லக் கூடியதுமான அரசியல் நாகரீகம் தெரிந்த ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவது என்ற முடிவில் முன்பு எமக்கு கொடுக்கப்பட்ட ஏமாற்றங்களை கருத்தில் கொண்டு தாங்கள் பிரதிநித்துவப்படுத்தப் போகும் கட்ச்சியுடன் சகலவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதன் பிற்பாடு கிடைக்கப் பெறுக்கின்ற சிறந்த முடிவின் அடிப்படையிலேயே எமது இந்த உன்னத பயணம் தொடங்கப்போகின்றது. அத்தோடு எந்த கட்ச்சியாக இருந்தாலும் ஒரு வேட்பாளரே நிருத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருப்பதோடு. அதனை உறுதிமொழியாகவும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:-  கல்ல்குடாவில் தற்போது பிரதி அமைச்சராக உள்ள அமீர் அலிக்கு தனிப்பட்ட முறையிலும் சரி கல்குடாவின் பிரதிநித்துவத்தை தீர்மானிக்கின்ற முக்கிய சக்தியாகவும் சரி குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த வகையில் நீங்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எதிராக  களமிறக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்க போகின்ற வாக்குகள் எந்த வகையில் கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கப்போகின்றது?

Dr.முஸ்தபா:-  வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவது. ஆனாலும் மணிதனின் சிந்தனா சக்திக்கு உட்பட்டு மணிதன் சிந்திக்க வேண்டும் என்ற இரீதியில் பார்க்கும் பொழுது இப்போது இருக்கின்ற அரசாங்கமானது ஒரு இஸ்தீரமற்ற நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றது.

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு பிற்பாடு இந்த அரசாங்க என்ன செய்யப்போகின்றது என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்னுமொறு அரசியல் மாற்றம் கூட இந்த நாடிலேயே இடம்மெற முடியாது என யாராலும் உறுதிப்பட சொல்ல முடியாது. அந்த வகையில் எமது சமூகத்தின் உண்மை நிலையினை அறிந்து சமூகமே ஒன்றன நினைத்து சகோதரர் அமீர் அலி எம்முடம் இனைந்து செயற்படுவார் எனின் எமது நோக்கத்தை நாம் இலகுவில் அடைந்து கொள்ள வாய்பிருக்கின்றது. இங்கு தனிப்பட்டவரின் வாக்கு வங்கி ஒரு போதும் செல்வாக்கு செலுத்தப் போவதில்லை. அந்த வகையில் சகோதரர் அமீர் அலி அவர்களுடன் நாங்கள் கல்குடா சமுகத்தின் பிரதிநிதிதுவத்தை தக்கவைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். மிக விரைவில் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் அவர் மறுக்கும் சந்தர்பத்தில் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்காக கல்குடாவின் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அதன் வெற்றியை அடைந்து கொள்வதில் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- பிரதி அமைச்சர் அமீர் அலியின் உதவியுடன் பாரளுமன்ற பிரதிநித்துவத்தை தக்கவைக்க போகின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். அவ்வாறானால் அவரை அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்கப்போகின்றீர்களா? அல்லது அவருடைய வெற்றிக்க்காக பாடுபட்டு அவரை மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதற்க்கும் துணை நிற்கப்போகின்றீர்களா?

Dr.முஸ்தபா:-  இரண்டுமே இல்லை.  அரசியல் என்று வரும் போது ஜனநாயக நாட்டில் அவருக்கு கேட்கும் உரிமை இருப்பது போலவே மற்றவர்களுக்கும் தேர்தல் கேட்கின்ற உரிமை இருக்கின்றது. பிரதி அமைச்சர் அமீர் அலிக்காக நீங்கள் வேலை செய்யப்போகின்றீர்களா என்ற கேள்விக்கு நான் சொல்வதாவது… அன்மையில் எமது பிரதேசத்தில் எங்களால் எடுக்கப்பட்ட  பல கணக்கெடுப்புக்களில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் செல்வாக்கானது மக்கள் மத்தியில் 35 தொடக்கம் 40 வீதமாகவே காணப்படுகின்றது. அதனை கருத்தில் கொண்டு அவருடன் தெளிவான பேச்சுவார்த்தைகளை நடாத்த இருக்கின்றோம். அதனடிப்படையில் அவருக்கு சில முக்கிய விடயங்களை தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்த என்னியுள்ளோம். அந்தவகையிலே எல்லோரும் மணிதர்கள் என்றடிப்படையிலும்  எல்லோருக்கும் மனச்சாட்ச்சி இருக்கின்றது என்ற வகையிலும்  நாங்கள் எல்லோரும் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்கள் என்றடிபடையிலும் அவர் நல்லதோர் முடிவினை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- மிகவும் கஸ்டப்பட்டு வைத்திய பட்பட்டப்படிப்பினை முடித்து மக்கள் மத்தியில் செல்வாக்கினை அதிகரித்துவரும் நீங்கள் சிலவேலையில் துரதிஸ்டவசமாக இத்தேர்தலுக்கு பிற்பாடு சகோதரர் ஜவாஹிசாலியை போன்று நீங்களும் உங்களுடைய இந்த உன்னத தொழிலினை இழக்க நேரிடலாம். அது சம்பந்தமாக எதைக் கூற விரும்புகின்றீர்கள்?

Dr.முஸ்தபா:-  அல்ஹம்துல்லில்லாஹ்.  ஒருவருக்கு உணவளிப்பது என்பது இறைவன் புறத்தில் இருந்து வரும் விடயமாகும். நான் கணவில் கூட நினைக்கவில்லை வைத்தியனாக வருவேன் என்று. அதே போன்று பிறக்கும் போது எவரும் இவ்வாறுதான் நான் எதிர்காலத்தில் இருப்பேன் என நினைத்துக் கொண்டு இவ்வுலகில் பிறப்பதில்லை. இத்தொழில் எனக்கு இறவைன் தந்த நன்கொடையாகும். அல்லாஹ் தந்த இந்த தொழிலை அவனுடைய பெயரால் மக்களுக்காக தூக்கி எறிவது என்பது மிகவும் சர்வசாதாரன விடயமாகும்.

அஹமட் இர்ஸாட்:- தூய குடிநீர் சமந்தமாக பல அரசியல் முன்னெடுப்புக்கள் தலைதூக்கியுள்ளமை சமந்தமாக உங்களுடைய கருத்து எதுவாக இருக்கின்றது?

Dr.முஸ்தபா:-  இதில் உண்மைக்கு புறம்பான பல விசயக்கள் இருக்கின்ற போதிலும் உண்மையான விசயம் ஒன்றினை கட்டாயம் கூறியே ஆகவேண்டும். அதாவது எமது பிரதி அமைச்சர் அமீர் அலி இரண்டு வருடங்களுக்கு முன்பே  அதாவது இப்போது எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் என்னுடனும் கலந்தாலோசித்து பல முன்னெடுப்புக்களைச் செய்தார்  செய்து வருக்கின்றார்..

 ஆனாலும் தற்போது பல அமைப்புக்களும் இது சமந்தமான முன்னெடுபுக்களில் ஈடு பட்டு வருவதினை ஊடகங்கள் வாயிலாக அறியக்குடியதாக உள்ளது. இது எமது சமூகத்துக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனையாகும் ஆனால் இது ஒரு பாரிய பிரச்சனை அல்ல. தேசிய அரசியலுக்கு கொண்டு செல்வதற்கோ அல்லது புதுமுகங்கள் களமிறக்கப்படுவதற்கோ ஆயுதமாக பயண்படுத்தப்படும் அளவுக்கு பாரிய பிரச்சனையாக தான் இதனை கருதவில்லை. எமது பிரதேசத்தை விடவும் புத்தளம்  மன்னார் போன்ற பிரதேசங்கள் அதிகளவில் தூய குடிநீர் பிரச்சனையினை முகம்கொடுத்து வருக்கின்றது. ஆனாலும் நிட்சயமாக இது ஒரு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்பது மட்டும் எனது கருத்தாக அமைகின்றது.

முஸ்தபாவின் விலாவாரியான கருத்துக்கள் அடங்கிய காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி- ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.