Advertisement

Main Ad

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 80 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Ariram Panchalingam

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 80 வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 109 வாகனங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

வாகனங்கள் காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் 752 வாகனங்கள் காணப்பட்டதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச வாகனங்களை அனுமதியின்றி வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும், அவ்வாறான சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படும் பட்சத்தில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
காணாமற்போயுள்ள 109 வாகனங்களை உடன்வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவ்வாறானவர்கள் தராதரம் பாராது கைதுசெய்யப்படுவார்கள் எனவும், வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.