Advertisement

Main Ad

யாருவரப் போறாங்க புள்ள - பாலமுனையு.எல். அலி அஷ்ரஃப் N கவிதை....

                                     
                                                      யாருவரப் போறாங்க புள்ள



போன இலக்சனுக்கு
இளிச்சிக்கிட்டு போன எம்பி
எம்மைநம்பி
ஊருக்குள்ள
ஊர்வலமாய்
வாராருபுள்ள.

கிடுகு கூரையை
ஓட்டுக் கூரயாய்
மாற்றித் தருகிறேன்
ஓட்டுப் போடுங்கள் என்றவரு
இந்த இலக்சனுக்குத்தான்
வாரார்
எமது கிடுகுக் கூரையோ
இத்துப்போய்
வானம் எட்டிப் பார்த்து
சிரிக்கிறது
நமது உள்ளுட்டைப் பார்த்து.

கோசங்ளாலும்
வேசங்களாலும்
பாசாங்கு காட்டி
வங்கிக் கணக்கை
நிரப்பிகொள்கிறார்கள,;
நமது வயிறோ
இன்னும்
பட்டிணியால்
பரலோகம் காணும்
நாட்களை
எண்ணிக் கொள்கிறது புள்ள.

பொய்யும் ஏமாற்றமும்
சண்டித்தனமும்
சந்திக்குவர
சக்தியுள்ளவர்கள்
சனங்களின்
கனவு களை எரித்து
மனங்களை வென்று
தம் கனவுகளை மட்டும்
நிஜங்களாய்
நிலையாக்கிக் கொள்கின்றனர்.

ஓவ்வொரு
தேர்தலிலும்
நம்மை ஏமாற்றி பிழைக்கும்
இந்தவியாபாரிகளை
நம்மமடச்சனங்கள்
எப்பபுள்ள
புரியப்போகிறது.

நம்ம குடிலுக்குள்ள
நாளைய சோற்றுக்கு
ஓன்றுமே இல்லை
ஆனா நம்ம எம்பிக்கு
பத்துதலமுறக்கி
அசயாம திங்குறத்துக்கு
அசயாஅசயும் சொத்து
நம்ம முள்ளிமல அளவுக்கு
கெடக்குதாம் புள்ள.

எம்பிட தம்பிசெய்த
கொந்தறாத்து றோட்டெல்லாம்
மழையோடுகரஞ்சு
குமிழியாகிகாணாமல்
போயிட்டுபுள்ள,
வடிச்சல் வாய்க்காலும்
காணாத்தகாசு போல்
தொலஞ்சுராமர் பாலமாய்
சரித்திரத்தில் சஞ்சரிக்கப்
போகிறதுபுள்ள.


தேர்தலோடு
எம்பிமாரும்
ஏமாற்றிப் போறாங்க
நம்ம
ஏழ்மமட்டும்
ஏமாறமல்
ஏணியிலே
ஏறுதேபுள்ள

நம்மவறுமய
கழுவிவிட்டு
கண்ணீரில்
கரயும் நமது
கனவுகள
கரசேர்க்க
கனவான்
யாருவரப்போறாங்கபுள்ள.

பாலமுனை யு.எல். அலி அஷ்ரஃப்