பைஷல் இஸ்மாயில் -
வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை
வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென அட்டாளைச்சேனை
பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான
எஸ்.எல்.முனாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு
மாகாணத்தில் பெய்துவரும் தொடர் மழைக் காரணமாக இடம்பெயர்ந்துள்ள
அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச மக்களை அட்டாளைச்சேனை
பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான
எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பொதுப் பணிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்
அடங்கிய குழுவொன்று கடந்த ஒரு வாரகாலமாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கான
நிவாரணம் மற்றும் இருப்பிடத்துக்கான ஏற்பாடுகளை செய்தும் வருகின்றனர்.
இதன்போதே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'வெள்ளம்
வழிந்தோடிய பின்னர் இம்மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது பல்வேறு
பிரச்சனைகளை எதிர்கொள்வர். உணவு மற்றும் சுகாதார பிரச்சினைகளை இம்மக்கள்
எதிர்கொள்வர். வெள்ளநீர் உட்புகுந்தமையால் வீடுகளில் ஏற்பட்டிருக்கும்
பாதிப்புக்களைத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும், பிள்ளைகளின்
புத்தகங்கள் உட்பட கல்வி உபகரணங்களை பெற்றுகொடுக்க வேண்டிய தேவையும் உள்ளன.
இப்பிரச்சினைகளை
தீர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள
முன்வரவேண்டும். அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர் மற்றும்
கிராம சேவகர்களும் இதுவரை எவ்வித நடவடிக்கைகைளையும் மேற்கொள்ளாமலும்
தலைமறைவாக இருப்பதை என்னி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விசனம்
அடைந்து காணப்படுகின்றனர். இவர்களின் பாதிப்பைக் கூட ஏன் அட்டாளைச்சேனை
பிரதேச செயலாளர் கணக்கெடுக்காமல் உள்ளார் என்பது மக்களின் மனதை வெகுவாக
பாதித்துள்ளது என அவர் கோரியுள்ளார்.
பொது
இடங்களில் தங்கியுள்ளவர்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர் உள்ளிட்ட
அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் பருவாயில்லை நான் அவர்களால் தெரிவு
செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் அதைவிட அம்பாறை மாவட்ட பொதுப்
பணிகள் அமைப்பின் தலைவர் என்ற வகையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட மக்களை
ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் அவர்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்கி
வருகின்றேன்.
இருப்பினும் அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பார்.
இதற்கான முன்னாயத்தங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள முன்வரவேண்டும்' என கோரியுள்ளார்.