Advertisement

Main Ad

மகிந்தை வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ்


                                          தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு  ஆளர்கள்  தங்கள் கட்சி   தலைமை எடுத்த முடிவு  சாதுரியமானது என்று கொண்டாடலாம்    ஆனால் அது தப்புக் கணக்கு . மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு  என்பதை இங்கு  நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மகிந்த  அரசு கூடிக் கூடிப் பேசி  முஸ்லிம் காங்கிரஸ்  தலைமையை  மீண்டும்  முட்டாளாக்கி  உள்ளதுதான்  உண்மை.

முஸ்லிம் காங்கிரஸ்  தலைமை பொது வேட்பாளருக்கு ஆதரவு  என்று அறிவிக்கத் தேவையான  அவசியமும்  இல்லை  தன் அமைச்சுப் பதவியை இழக்க வேண்டிய  அவசியமும் இல்லை அரசோடு இருந்து இருக்கவேண்டியது  தான் புத்திசாலித்  தீர்வு.

இதை முஸ்லிம் காங்கிரஸின்  முட்டாள் தனம்  என்றுதான் கூற வேண்டும்   இதன் பின் விளைவுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தான் பொறுப்புக் கூற வேண்டும்.மகிந்தவின்  இடிக்கிப் பிடியில் இருந்து இவரை விட்ட காரணத்தையும்  நாம் அறிவோம் . இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன வென்று இங்கு குறிப்பிடுவது  தற்போதுள்ள  சூழ் நிலை காரணமாக  இங்கு தவிர்த்து  உள்ளேன்.

இறுதியாக இங்கு கூறிக் கொள்வது என்ன வென்றால் மகிந்தை வெற்றிக்கு வழி  வகுத்துக் கொடுத்துள்ளது முஸ்லிம் காங்கிரஸ்.