
அது வேறு யாருமில்லை. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். தவம் அவர்கள்தான். பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே கருத்துக்குக் கொண்டு வருவதற்கு அவர்களைக் கையாள்வதை தலைவர் றஊப் ஹக்கீமே பொறுப்பேற்றுக் கொண்டு தனக்கு விசுவாசமான தவத்தைக் கொண்டு மாகாண சபை உறுப்பினர்களை கையாள வைத்திருக்கிறார் என்பதை இப்போது எல்லோரும் வெளிப்படையாகப் பேசத் தொடக்கி விட்டனர். அது மாத்திரமன்றி ஏழு மாகாண சபை உறுப்பினர்களும் ஏக குரலில் தலைமையின் இறுதி முடிவே தமது முடிவு என்கின்ற கருத்தை மிகப்பலமாக எல்லா மட்டத்திலும் பேசி வருவதும் தலைவரை பல இடங்களில் விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பிடிப்பதும் தலைவருக்குச் சாதகமான தவத்தின் மன நிலையே என்பதை எல்லோரும் கூறுகிறார்கள்.
அப்படியாயின் தலைவர் றஊப் ஹக்கீமின் துருப்புச் சீட்டாக தவம் பயன்படுத்தப்படுவது தலைவரின் ராஜதந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோன்று நேற்றைய ( 26.12.2014) மக்கள் பிரதிநிதிகளுடனான தலைவரின் தனித் தனி சந்திப்புகளிலும் தவம் உள்வாங்கப்படவில்லை. தலைவரின் கருத்தே தவத்தின் கருத்து எனக் கூறி தவத்திற்கென பிரத்தியேக நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்நிகழ்வும் தலைவர் தவத்தை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். இதனை நாம் பரீட்சித்துப் பார்ப்பதாயின் இன்றைய (27.12.2014) உயர்பீடக் கூட்டத்தில் தவம் மௌனம் காக்கிறாரா? அல்லது பேசுகிறாரா என்பது தொடர்பில் கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும். பேசினால் அவர் தலைவரின் துருப்புச் சீட்டல்ல. பேசாமல் மௌனமாக இருந்தால் நிட்சயம் துருப்புச் சீட்டே. எல்லோரும் இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் அவரைக் கவனியுங்கள்.