அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் அமைச்சர் நிந்தவூர மாஹ_ம் முஸ்தாபாவின் மகன் - நவாஸ் முஸ்தபா அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2 நாற்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் தெரிவித்து வருவதாக தெரிவிக்கின்றார்.
இவர் கடந்த மேல்மாகணசபைத் தேர்தலில் றிசாத்பதியுத்தீன் கட்சியில் போட்டியிட்டவர். இன்று அவர் அம்பாறையில் சிரேஸ்ட அமைச்சர் பீ. தயாரத்தினாவுடன் இனைந்து சிங்கள பிரதேசங்களுக்கும் முஸ்லீம் பிரதேசங்களிலும் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து தெரிவித்தார்.
அங்குள்ள சிங்கள மக்கள் இன ரீதியரியான சிந்தணையறற் முஸ்லீம் தலைவர்களான மறைந்த அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப், எம்.எம்.முஸ்தபா, பேரியல் அஸ்ரப் போன்றோர்கள் சிங்கள பிரதேசங்களுக்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இன்றும் உள்ளூர் பிரதேச பிரநிதிகள் பௌத்த மதகுருக்கள் என் முன் பேசினார்கள்.
அதைப்போன்று நவாஸ் முஸ்தாவையும் சிங்கள மக்களோடு இணைந்து சேவையாற்றுங்கள.; உங்களைப் போன்றவர்கள் பிரிவினைவாதம் இனரீதியான சிந்தனை அற்றவர்களை நாம் இப்பிரதேசத்தில் அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் நவாஸ் தெரவித்தார்.
கணக்காளர் நவாஸ் முஸ்தபா மேலும் விடுத்துள்ள அறிக்கையில் -
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என்னதான் முடிபுகளை எடுத்தாலும் முஸ்லீம்களாகிய நாம் சிறுபாண்மையினராகவே இந்த நாட்டில் வாழ்கின்றோம். நாம் இந்த நாட்டில் ஏனைய இனங்களோடு இணைந்து ஜக்கியமாகவே வாழவேண்டும். நாம் இனரீதியாக பிரிந்து செயல்பட்டால் பெரும்பாண்மையினம் தம்மையும் ஒரு பிரிவினைவாத இனமாகவே இடைபோடுவார்கள். நாம் இணைந்து செய்படுவதன் முலமே நமது குறிக்கோல்களை அபிலாசைகளையும் அடையமுடியும்.
ஆனால் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் முஸ்லீம்கள் கடந்தகால யுத்தத்தின்போது வாழ்ந்த நிலைமைகளை சற்று நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் முஸ்லீம்களாகிய நாம் பட்ட துண்பங்கள,; உறவினர்கள் இழப்பு, சொத்துக்கள் இழப்பு, ஆட்கடத்தல,; போன்றவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். யுத்தத்தை வென்று நமக்கு சமாதான காற்றைப் சுவாசிக்க பெற்றுக் கொடுத்தவர் இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே. தற்பொழுது இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4மணிக்கே கொழும்பை வந்தடைகின்றோம். அவ்வாறாக நெடும்சாலைகள் பாதைகள் அபிவிருத்திகளை மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார். எமது அரிசி, மீண்களை வெகு இலகுவாக கொழும்புக்குச் சென்று மொத்தமாக விற்கின்றோம், பொத்துவில் பாசிக்குடா போன்ற பிரதேசங்கள் சுற்றுலா பிரயாணிகள் வருவதால் நாம் பிரதேச வர்த்தகர்கள் அண்னியச் செலவாணியைப் பெற்றுக் கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் நாம் மாலை 5 மணியானதும் வீடுகளில் தங்கிநிற்போம். பாதை ஓரங்களில் குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கும.; ஒவ்வொரு கிலோ.மிற்றருக்கு பாதுகாப்பு செக் பொயிண்டுகளில் ஏறி இறங்கினோம். பாடசாலைக்கு சென்ற பிள்ளைகள் மீண்டு வீடு திரும்பி வரும் வரை அல்லது வயலுக்கு கடலுக்கு சந்தைக்கு வியாபாரத்திற்குச் சென்ற கணவன் வரும் வரை எமது தாய்மார்கள் வாசற்கதவில் காத்து நின்ற வரலாறை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது நமது வயல்களில் நெல்லை அறுவடை செய்து வீடு வரும்வரை நாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வந்த கால கட்டம். மீன்பிடித்தொழில், வியாபாரம் போன்றவற்றில் நாம் பட்ட துண்பங்கள், எத்தணை? எமது உறவினர்களை இழந்தோம். பாதையில் சுயமாக போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை, குண்டுவெடிப்பு, கப்பபம் வழங்கியது, இதனால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம். தற்பொழுது சமாதான காற்றை சுவாசிக்கின்றோம். இந்த நிலைமையை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. ஆகக்குறைந்தது நமக்கு அபிவிருத்தியில் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்வதற்கு தலைநிமிர்ந்து யுத்தத்தை வென்று அதனை இல்லாதொழித்த மஹிந்தவுக்கே நாம் ஆதரவளிக்க வேண்டும்.
நாம் இன ரீதியாகவும் பிரதேச ரீதியாக பிரிந்தால் நாம் எவ்வாறு வாழ்வது? அம்பாறையில் டி.எஸ்.சேனாநயகக் சமுத்திரத்தில் இருந்துதான் நமக்கு வயல்நிலங்களுக்கும் குடிநீர்க்கும் நீறைப்பெற்றுக் கொள்கின்றோம். அதற்காக பிரதேச ரீதியாக பிரிந்தால் தமிழ் மக்களும் பிரதேச ரீதியாக பிரிவினை வேண்டி நிற்பார்கள் நாம் குருநாகல், கண்டி,மாத்தளை பிரதேசங்களில் வாழும் முஸ்லீம் தமிழ் மக்கள் ஏனைய இனங்களோடு பின்ணிப்பிணைந்தே வாழ்கின்றோம். வடகிழக்கு அப்பால் 3-2பங்கு முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். அவர்களையும் நாம் சிந்திக்க வேண்டும். நாம் நாளுக்கு நாள் பிரிந்து செல்வதால் நண்மை கிட்டப்போவதில்லை.
தற்போதைய முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள சில இளைஞர்கள் மட்டுமே மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிந்திக்கின்றனர். இவர்களுக்கு நமது கடந்த கால வரலாறுகளை உணர்த்தி அவர்களை சரியான பாதையில் கொண்டு வருதல் வேண்டும் ஆனால் பெண்கள் வயோதிபர்கள் இன்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கே அமைதியாக இருக்கின்றனர். என நவாஸ் முஸ்தபா தெரிவித்தார்.