Advertisement

Main Ad

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்...

Parthiban Shanmuganathan


திருகோணமலை மொறவெவ 10 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இவர்கள் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,