Advertisement

Main Ad

2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு....

Parthiban Shanmuganathan


2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு
போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் அதிகாரிகள் திருப்தி தெரிவித்தனர். இதன்பிறகு போட்டித்தொடருக்கான பரிசுத் தொகைக்கு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதன்படி கடந்த உலகக்கிண்ண போட்டியை விட மொத்த பரிசு தொகையின் மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை கடந்த கோப்பையை ஒப்பிட்டால் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
பரிசுத் தொகை விபரம் வருமாறு:-
  • கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 3.975 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
  • எந்த போட்டியிலும் தோற்காது கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
  • இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
  • அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 600,000 அமெரிக்க டொலர்கள்
  • காலிறுதியில் தோல்விறும் 4 அணிகளுக்கும் தலா 300,000 அமெரிக்க டொலர்கள்
  • ஒவ்வொரு குழு நிலைப் போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 45,000 அமெரிக்க டொலர்கள்
  • முதல் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா 35,000 அமெரிக்க டொலர்கள்