வீட்டு மின் பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களை குறைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் சற்று நேரத்திற்கு முன்னர் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மின்கட்டண திருத்தத்தின் ஊடாக வீட்டு மின்சார பாவனையாளர்களிடம் இதுவரை அறவிடப்பட்ட எரிபொருள் ஒப்பீட்டு கட்டணம் 10 வீதத்திலிருந்து 40 வீதம் வரை நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, 25 வீத மின்சாரக் கட்டண குறைப்புக்கு அமைவாக அந்த பிரிவிலுள்ளவர்களுக்கான ஒரு அலகு மின்சாரத்திற்கான கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு வீட்டு மின் பாவனையாளர்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதோடு ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த மின்பாவனையாளர்களின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
