Advertisement

Main Ad

மரக்கறி விலையில் வீழ்ச்சி; அரிசி மற்றும் மீன் விலைகள் அறிவிப்பு

Parthiban Shanmuganathan


மரக்கறி விலையில் வீழ்ச்சி; அரிசி மற்றும் மீன் விலைகள் அறிவிப்பு
புறக்கோட்டை சந்தையில் ஒரு சில மரக்கறி வகைகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.
இதற்கமைய ஒரு கிலோகிராம் வட்டக்காய் 40 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையும் முள்ளங்களி ஒரு கிலோகிராம் 40 ரூபா தொடக்கம் 60 ரூபா வரையும் தக்காளி ஒரு கிலோகிராம் 50 ரூபா தொடக்கம் 80 ரூபா வரையும் விற்கப்படுகின்றது.

இந்நிலையில், ஒரு கிலோகிராம் பீட்ரூட், கெரட்  மற்றும் கத்தரிக்காய் ஆகியன 80 ரூபா தொடக்கம் 100 வரை விற்கப்படுகின்றன.
புறக்கோட்டை சந்தையில் ஒருகிலோகிராம் கோவாவின் விலை 60 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை அமைந்துள்ள அதேவேளை, பச்சை மிளகாய் 80 ரூபாதொடக்கம் 160 ரூபா வரை விற்கப்படுகிறது.
புறக்கோட்டை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் நாட்டரிசி,  சிவப்பு பச்சை அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி 88 ரூபாவாகவும், ஒருகிலோகிராம் சம்பா அரிசி 91 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
புறக்கோட்டை சந்தையில் பருப்பு ஒரு கிலோகிராம் 155 ரூபா தொடக்கம் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, தேங்காய் ஒன்றின் விலை 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை காணப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 80 ​தொடக்கம் 85 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
பேலிகொடை மீன் விற்பனை நிலையத்தின் இன்றைய விலை விபரங்களை    இலங்கை கடற்றொழில் கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் பாறை மீன் 360 ரூபா தொடக்கம் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோகிராம் கெலவல்லா 480 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அஞ்சலா ஒரு கிலோகிராமின் விலை 480 ரூபா தொடக்கம் 580 ரூபா வரை அமைந்துள்ளதுடன், உருளை மீன் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் கனவாய் ஒருகிலோகிராமின் விலை 480 ரூபாவாகவும் பெரிய இறால் ஒரு கிலோகிராமின் விலை 900 ரூபாவாகவும் காணப்படுகின்றது.