(எஸ்.அஷ்ரப்கான்)
கடந்த
காலங்களில் நிலவிய அசாதாரண நிலமை காரணமாக ஸ்தம்பிதமடைந்த புகையிரத
ஆசனப்பதிவு நிலையத்தினை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு விசேட
கவனத்தைச் செலுத்தும்படி ஆலோசனை ஒன்றை முன்வைத்து சாய்ந்தமருது சுபீட்சம்
சமூக நற்பணி மன்றத்தினால் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிற்கு மகஜர்
ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அமைப்பின்
தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார், செயலாளர் ஏ.ஆர். அஷ்பாக் அஹமட் ஆகியோர்
கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள அம்மகஜரில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாரை மாவட்டத்தில் வாழும் அத ிகமான மக்கள் நாள்
தோறும் மட்டக்களப்பிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் புகையிரதத்தில்
பயணங்களை மேற்கொள்கின்றனர். தற்போது புகையிரத ஆசனப்பதிவுகள் மொபிடல் ஊடாக
நாடு பூராகவும் நவீன தொழிநுட்ப முறையில் கணிணி மூலம் பதிவு
செய்யப்படுகின்றன. பிரயாணம் செய்யும் திகதியிலிருந்து 44 நாட்களுக்கு
முன்னர் பிரயாணம் சென்று வருவதற்கான ஆசனப்பதிவுகளை ஒரே தடவையில் ஒரே
நிலையத்திலேயே செய்து கொள்ள முடியுமாக இருப்பதுடன் அதனை இரத்துச் செய்யவோ
அல்லது பிரயாணத்திகதியில் மாற்றீடு செய்யவோ வேண்டுமாயின் உரிய புகையிரதம்
புறப்படும் நேரத்திலிருந்து ஆறு மணித்தியாலத்திற்கு முன்னர் சென்று
அச்சேவையினை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க
விடயமாகும்.
அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப் பற்று அட்டாளைச்சேனை, அக்கரைப் பற்று, ஒலுவில், நிந்தவூர், கா ரைதீவு, சம்மாந்துறை, சாய்ந் தமருது, அம்பாரை, மத்திய முகாம் , பாண்டிருப்பு, மருதமுனை, நட் பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களும் அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத் தில் அமைந்துள்ள களுவாங்சிகுடி, கல்லாறு, நீலாவணை போன்ற பிரதே சங்களும் கல்முனை நகரினை அண்மி த்த பிரதேசங்களாகும். மேற்படி ப ிரதேச மக்கள் புகையிரத ஆசனப்பதி வுகளை செய்துகொள்வதற்காக மிகவு ம் சிரமத்திற்கு மத்தியில் 30 த ொடக்கம் 60 கிலா
மீற்றர் துாரம் வரை பயணித்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு
செல்லவேண்டியுள்ளது. அவ்வாறு சென்றும் கூட ஆசனங்களைப் பதிவு செய்ய
முடியாமல் வெறும் கையுடன் திரும்பி வரும் நிலைமையும் ஏற்படுவதுண்டு
என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
1979
- 1983 வரையான காலப்பகுதியில் கல்முனையில் ஆசனப்பதிவு நிலையமொன்று இயங்கி
வந்துள்ளதாகவும், கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை
யுத்தம் காரணமாக புகையிரத சேவை தடைப்பட்டதனால் புகையிரத ஆசனப்பதிவு
நிலையமும் மூடப்பட்டதாக இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது
அமைதியான சூழ்நிலையில் புகையிரத சேவையும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆகவே
கடந்தகால அசாதாரண சூழ்நலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்முனையின்
புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தினை இப்பிரதேச நுாற்றுக்கணக்கான மக்களின்
நன்மை கருதி மீண்டும் கல்முனை நகரில் திறப்பது தொடர்பாக தங்களின் விசேட
கவனத்தைச் செலுத்தும்படி வேண்டிக்கொள்கின்றோம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.