திருமணத்திற்கு முன் முதலில் குழந்தை பெற்றுக்கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார்.
”அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன்” என்றார்.
ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.