Advertisement

Main Ad

மட்டகளப்பு கிரிக்கட்டில் பட்டையை கிளப்பும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம்.

 ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி

30 வருடங்கள் பழைமை வய்ந்த ஓட்டமாவடி வளர்பிரை விளையாட்டு கழகம் அன்மை காலமாக கிரிக்கட் விளையாட்டில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மட்டகளப்பு மாவட்டத்திலே கிரிக்கட் துறையில் பல வெற்றிகளை பெற்று வருவதானது கல்குடா பிரதேசத்தில் உள்ள கிரிக்கட் ரசிகர்களையும் பொதுமக்களையும் பெரும் மகிழ்ச்சிக்குட்படுத்திய விடயமாக காணப்படுகின்றது.

இதற்கு முக்கிய சான்றாக 6 மாதங்களுக்கு முன்பு கிழக்கு மாகானத்திலே இதுவரை நடைபெற்றிராத வகையில் மாவட்டரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக மைதானத்தில் ஈஸ்ட்றன் சலஞ்சர்ஸ் விளையாட்டு கழகதினால் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டரீதியில் 25 விளையாட்டு கழகங்களை ஒருங்கினைத்து சீனித்தம்பி சம்பந்தன் மூர்த்தி ஞாபகர்த்த கிண்ண 20 ஓவர்களைக் கொண்ட கடின பந்து  கிரிக்கட் சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில் மிக இலகுவான முறையில் மட்டகளப்பு டிஸ்கோ விளையாட்டு கழகத்தினரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியமையானது மாவட்டத்திலேயே எலோருடைய கவணத்தையும் வளர்பிறை விளையாட்டுகழகம் தனதக்கிக்கொண்டது.

இவ்விறுதி போட்டியானது கிழக்கு மாகானத்தின் கிரிக்கட் வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஏனென்றால் கிழக்கு மாகான விளையாட்டு கழகங்களும் , மக்களும் இவ்வாறானதொரு ஆடம்பரம் கலந்த மகிழ்ச்சிகரமான கிரிக்கட் சுற்றுப்போட்டியினை இதுவரை காலத்துக்கும் சந்தித்திருக்க வாய்ப்பிலை என்பதனாலாகும்.

அதுமட்டுமல்லாமல் தொடந்து பல வெற்றிகளை மாவட்டத்தில் தனதாக்கிக்கொள்ளும் வளர்பிறை விளையாட்டு கழகமானது அன்மையில் நியூஸ்ட்டார் விளையாட்டு கழகம் 22 கழகங்களை ஒருகினைத்து மிகப்பிரமாண்டமாக நடாத்திவந்த KPL எனப்படும் கல்குடா பிரீமியர் லீக் வெற்றிக்கின்னத்துக்காக லீக் சுற்றுப்போட்டி அனைத்திலும் வெற்றியீட்டி இறுதிப்போட்டியில் நியூஸ்ட்டார் விளையாட்டுக் கழகம் நிர்னயித்த128 ஓட்டங்களை அதிரடியானமுறையில் 14 ஓவர்களில் எட்டிப்பிடித்து KPL கிண்ணத்தை சுவீகரித்தமையானது மாவடத்தினதும் மாகானத்தினதும் கிரிக்கட் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்துள்ளது. இந்த KPL தொடர் சுற்றுப்போட்டியானது ஓவொரு வருடமும் கல்குடாவில் வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த
KPL இறுதிப்போட்டியின் கானொளியினை (VIDEO) யூ டியூப்பில் இந்த விலாசத்துக்கு சென்று
http://www.youtube.com/watch?v=vydsWIKNIU0&feature=share  அல்லது இந்த விலாசத்தில்
Kalkudah Pemiyer league - 2014 final match highlights எமது வாசகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

கொழும்புஇ கண்டி மாவட்டங்களை போன்று பாடசாலை மட்டத்திலும் கழக ரீதியிலும் கிரிக்கட் துறையினை ஒப்பிடும் போதும்இ கடந்த 30 வருட யுத்த நிலைமையினை கருத்தில் கொண்டு பார்க்கும் போதும் முக்கியமாக கிழக்கு மாகானத்தில் விளையாட்டு துறையில் கல்குடா பிரதேசம் திறமைவாய்ந்த இளைஞ்சர்களை கொண்டிருந்தும் பூச்சியம் எனப்படும் பின் தங்கிய நிலையிலேயே காணப்பட்டு வந்தது. அந்த வகையில் இப்பொழுது  ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் எழுச்சியானது கழகத்தினுடைய உள்நாட்டு வெளிநாட்டு ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் மாவட்ட, மாகான , தேசிய மட்டத்திலும் பேசும் அளவுக்கு தனது கிரிக்கெட் துறையின் வெற்றிகளை கடந்து வருவதானதும் கல்குடாவின் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும்.

அது மட்டுமல்லாமல் கழகமானது விளையாட்டு துறையை மட்டும் கருத்தில் கொண்டு தனது செயற்பாட்டினை அமைதுகொள்ளாமல் ஏனைய சமூகப்பனிகளிலும் கழகத்தினை ஈடுபடுத்தி வருவதானது பிரதேசத்தில் கழகமானது 30 வருடகாலத்தை தடையின்றி கடந்து வருகின்றமைக்கு முக்கிய காரணமாக காணப்படும் அதேநேரம் UNP யின் நீண்ட காலத்தலைவர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் விமர்சனத்துகுள்ளாகியும் கட்சியினை வழிநடத்தி செல்வதைப்போல் வளர்பிறை விளையாட்டு கழகமானது ஆரம்பத்தில் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவரும், தற்போது நீண்ட காலமாக நிலைத்திருந்து பொதுத்தலைவராக செயற்பட்டு வரும் MAC.ஜிஃப்ரி கரீம் அதிபர் அவர்கள் காலத்துக்கு காலம் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவருடைய கட்டுக்கோப்பான நிருவாக திறமையே கழகமானது இவ்வாறான வளர்ச்சிப்படியினை அடைந்து கொள்வதற்கு மிக முக்கிய காரணமாகும்.

மேலும் விளையாட்டுதுறை, சமூகப்பனி என்பவற்றுக்கு அப்பாற்பட்டு கல்குடாவின் அரசியலை திர்மானிக்கும் சக்தியாகவும் ஓட்டமாவடியின் வளர்பிறை விளையாட்டு கழகம் திகழ்வதானது அதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கினை எடுத்துக்காட்டுவதாக அமையும் அதே நேரத்தில் கல்குடாவின் முன்னால் பிரதி அமச்சர் மர்ஹூம் மொஹதீன் அப்துல் காதரினதும்இ முன்னால் அமைச்சரும் தற்போதைய மாகானசபை உறுப்பினருமான ஆளுளு.அமீர் அலி அவர்களினது அரசியல் வெற்றிகளுக்கும் பெரும் பங்களிப்பு செய்த கழகம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த அடிப்படையில் இன்னும் பல மயில் கல்களை வளர்பிறை விளையாட்டு கழகமானது அடைய வேண்டும் என்பது பிரதேச மக்களினதும் கழக ஆதரவாளர்களினதும் விருப்பமாக இருக்கும் அதே நேரத்தில் நானும் கழகத்தின் நீண்டகால உறுப்பினர் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை எழுதியதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.








நன்றிஇ ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி