Advertisement

Main Ad

கல்முனையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் காயம்



கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி சந்திக்கு அருகில் இன்று (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சாய்ந்தமருது ஹொஸ்பிடல் வீதியை சேர்ந்த 60 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எம்.எல்.ஏ. ஹமீட் என்பவர் மரணமடைந்துள்ளார்.

காலை 10 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த மற்றொருவரான
கல்முனை நியூ வீதியை சேர்ந்த 38 வயதுடைய ஏ.எச். முர்ஷித் என்பவர் சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.