கல்முனை மக்களின் அரும் பெரும் பொக்கிசமாக திகழும் இந்த இறை இல்லத்தின் நிறைவடைந்த இந்த அழகு தோற்றத்தை எமது வாழ் நாளுக்குள் கண்டு மகிழ வேண்டும் என்ற மன அவாவில் எம்மைப்போல் உள்ள ஜீவன்கள் ஆயிரம் ! ஆயிரம் !!
எனவே எமது பேரவா நிறைவேற இப்பள்ளிவாயலின் நிர்மான பணிகளை அல்லாஹ்வின்
உதவியோடு விரைவாக பூர்த்தியகுவதட்கு அல்லாஹ் எமக்கு வழங்கிய செல்வங்களில்
ஒரு பகுதியினை இப்பள்ளிவாயளிட்கு வழங்கி அல்லாஹ்வின் மாளிகையான இப்பள்ளி
வாசல் நிர்மான பணிகள் பூரணம் பெற உதவுவோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :-
http://mgjmk.com/
கல்முனை (கரவாகு) முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாசல் ஹிஜ்ரி 532 இல் (கி.பி 1142) கரவாகுவில் (கல்முனை) நிர்மாணிக்கப்பட்ட இப் இப்பள்ளியானது இன்றுவரை சுமார் 900 வருடங்கள் நீண்டகால வரலாற்றை கொண்டது. இப் பள்ளிவாசல் முஹியித்தீன் பள்ளி என அன்றிலிருந்து இன்று வரை அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு நீண்ட சரித்திரம் கூறப்பட்டுள்ள கரவாகு (கல்முனை(க்குடி) முஹியித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் 1790 ஆம் ஆண்டும் பின்னர் 1806 ஆம் ஆண்டும் புனருத்தானம் செய்யப்பட்டது. இப் புனருத்தானத்தின்போது பள்ளிக்கட்டடமானது செங்கற்களால் நீறு கொண்டு கட்டப்பட்டு மரத்தினால் கூரை போடப்பட்டு சல்லி ஓட்டினால் வேயப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
இதன் பின்னர் இப் பள்ளிவாசல் 1920 ஆம் ஆண்டு மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது. இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட போது அயலூரவர்கள் அதனைப் புதினமாகப் பார்த்ததாகவும் அதன் சிறப்பைப் புலவர்கள் பாராட்டிப் பாடியதாகவும் வரலாறுகள் கூறுகின்றது. இதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கையாளர் சபைக் கூட்டத்தில் இப் பள்ளிவாசலை சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப பெரிதாகக் கட்டி முடிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் 1985 ஆம் ஆண்டு பள்ளிவாசல் பெரிதாக்கும் திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நடப்பட்டது. தற்பொழுது இப் பள்ளிவாசல் கட்டடத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நம்பிக்கையாளர் சபையினரால் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கிழக்கிலங்கையின் மிகப்பெரிய "Dome" இணைக்கொண்டதாக அமையெப்பெற்றுல்ல இவ் முஹியித்தீன் ஜும்மா பள்ளியானது இதுவரையில் இலங்கையில் அமையெப்பெற்றுல்ல "Dome" கட்டுமான வரலாற்றில் முதன்மை பெறக்கூடிய வகையில் தொழில் நுட்பவியலாளர்களினால் முயற்சிக்கப்பட்டு வருகின்றது.
இது வரை காலமும் பாதுகாத்து வைக்கப்பட்டுவந்த பல நூறு வருட கலையம்சயத்துடன் கூடிய இவ்வூரின் பெயர் பூத்த ராசா ஓடாவியார் உட்பட பலரின் கைவண்ணம் காட்டும் தச்சு வேலையுடைய மர வேலைப்பாடுகளைக் கொண்ட புராதன சின்னங்களை (பழைய பள்ளிவாசலின் பாகங்கள்) பள்ளிவாசலின் உட்பகுதியில் பொருத்தி அதன் அழகை உணர்வு பூர்வமாக ரசிக்க கூடிய வாய்ப்பை கல்முனை வாழ் மக்களுக்கு வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கும் பள்ளி நம்பிக்கையாளர் சபையினரால் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் நிர்மாண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
யா அல்லாஹ் !
நாம் உட்பட எமது பாட்டன் முப்பாட்டன் முதல் எம் மூதாதேயர்கள் வரை சுமார் 900 வருட காலமாக உன்னை சுஜூது செய்து வந்த பூமி யாஅல்லாஹ்.
எம் உயிர் எம்மை விட்டு பிரிவதற்கு முன் இப்பள்ளிவாசலின் அழகிய எழில் மிக்க தோற்றத்தை உணர்வு பூர்வமாக ரசிக்க கூடிய வாய்ப்பை எனக்கும் என் ஊரார் அனைவருக்கும் தந்தருள்வயாக !
அமீன்.
யாரப்பல் ஆலமீன்.