சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு
அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு
கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத நபரொருவர்
பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகத்துக்கு இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
பட்டாஹ் அஹமட் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பவ தினம் பிராந்திய மதகுரு ஒருவர் தீர்ப்பை வாசித்ததும் அருகிலிருந்த
நகர சபை மைதானத்தில் டிரக் வண்டியொன்றில் பெருந்தொகையான கற்கள் எடுத்து
வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பட்டாஹ் அஹமட் கால் முதல் பாதம் வரை கறுப்புத் துணியாலான ஆடை மூடியிருக்க அந்த மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் அவர் இடுப்பு பகுதி வரை மண்ணில் புதைக்கப்படுகிறார்.
அதன் பின் அங்கிருந்த போராளி குழு உறுப்பினர்கள் பட்டாஹ் அஹமட் மீது துடிதுடித்து இறக்கும் வரை அவர் மீது கற்களை வீசுகின்றனர்.
மேற்படி சம்பவமானது ரக்கா நகரிலுள்ள உதைபந்தாட்ட மைதானத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது ஈராக்கில் 24 மணி நேர காலப் பகுதியில் போராளிகளால் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது மரண தண்டனை நிறைவேற்றமாகும்.
பட்டாஹ் அஹமட்டிற்கான மரண தண்டனைக்கு முன் 26 வயதான ஷம் ஸெஹ் அப்துல்லாஹ்
என்ற பெண்ணுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷம் ஸெஹ் மீதும் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அவருக்கு ரக்காவிற்கு அருகிலுள்ள தப்கா நகரில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டது. திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பைக்
கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு.