MOHAMED RINSATH - சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக நேற்று (08)
வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணியளவில் விபத்து ஒன்று சம்பவித்தது.
சாய்ந்தமருது பிரதான வீதியிலிருந்து, வைத்தியசாலை வீதிக்கு திரும்ப
முற்பட்ட மோட்டார் சைக்கிலை இலங்கை போக்குவரத்து சபையின் பொத்துவில்
சாலைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து
சம்பவித்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாய்ந்தமருது -7,
கல்யாண வீதியை சேர்ந்த 48 வயதுடைய ஏ.ரஹீம் என்பவர் காயங்களுக்குள்ளாகி
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சிகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.