Advertisement

Main Ad

கல்முனையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா 2014

எம்.வை.அமீர்-

2012 மற்றும் 2013ம்ஆண்டு காலப்பகுதியில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் தரம் 5புலமைபரிசில் பரீட்சைகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களையும் 2012ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரும் நிழல் கல்விப் பிரதி அமைச்சருமான எ.எம்.முஹம்மட் முஜீப் அவர்களின் தலைமையில் இன்று (2014-08-02) கமு/கமு/அல் பஹ்ரியா மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் முன்னாள் குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியவருமான சட்டத்தரணி ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கல்முனையை செதுக்கிய சிப்பிகளில் ஒருவரான ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் துணைவியார் சுஹாரா மன்சூர் அவர்களும் வருகை தந்திருந்தது விசேட அம்சமாக இருந்தது.

அதிதிகள் வரிசையில் ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் ZM.நதீர் மௌலவி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வை.எல்.யூசூப் முன்னாள் கல்வி அதிகாரியும் கல்முனை சாஹிரா பாடசாலையின் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சீ.ஆதம்பாவா, அக்கரைப்பற்று-கல்முனை சாரண மாவட்ட கெளரவ ஆணையாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் யூ.எல்.வதுஸ்சமான்,எஸ்.எம்.எம்.ரம்ஸான் போன்றோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சுமார் 82 மாணவர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். Breeze in Life எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் கவிதைத்தொகுதி ஒன்றினை எழுதிய MBF. சம்ஹா என்ற மாணவியும் இங்கு பாராட்டி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.