david
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி தேசிய மட்டத்தில் அனைத்துப் பாடசாலை
அணிகளுக்கும் இடையே நடத்திய 17 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்டப்
போட்டியில் தேசிய மட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இளவாலை புனித
ஹென்றியரசர் கல்லூரி வீரர்களை இன்று வியாழக்கிழமை பகல்10.30 மணியளவில்
தெல்லிப்பளை சந்தியில் இருந்து ஊர்வலமாக கல்லூரியின் மாணவர்கள்
ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை பாண்ட வாத்திய அணியுடன்
கல்லூரிக்கு அழைத்து சென்றார்கள்.