சந்தையில் மீன் வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
அண்மைக்காலமாக கடற்பிராந்தியங்களில் நிலவும் வானிலை இந்த விலையேற்றத்திற்கு காரணமென இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையங்களில் குறிப்பிடத்தக்களவு விலை மாற்றம் ஏற்படவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் மஹில் சேனாரத்ன கூறியுள்ளார்.
மீன் வகைகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
பேலியகொடை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,400 ரூபாவிற்கு விற்கப்படுவதுடன் ஒருகிலோகிராம் தலபத் மீனின் விலை 520 ரூபாவாக அமைந்துள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சள் சூரை மீன் 520 ரூபாவுக்கும் சூரை மீன் ஒரு கிலோகிராம் 400 ரூபாவுக்கும் பேலியகொடை மீன் சந்தையில் விற்கப்படுகிறது
