Advertisement

Main Ad

பொதுபல சேனாவின் கண்டி நிகழ்வு; இன வன்முறையை தூண்டும் வகையில் அமைந்தால் கடுமையான நடவடிக்கை

பொதுபல சேனாவின் கண்டி நிகழ்வு; இன வன்முறையை தூண்டும் வகையில் அமைந்தால் கடுமையான நடவடிக்கை

raja kandy
 
பொதுபல சேனா அமைப்பு இன்று கண்டியில் ஏற்பாடு செய்த நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பு ன்று மாலை 3.00 மணியளவில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் அதிஷ்டான பூஜையொன்றை நடத்த உள்ளதாகவும், அதனை நடத்த தலதா மாளிகை நிர்வாகத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கியிருக்கவில்லை எனவும் இதனால் இந்த நிகழ்வு நடைபெறுவது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத் தூண்டவோ இந்த சமய நிகழ்வு அமையுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹியங்கணை, கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த 300 முதல் 400 பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் இந்த சமய நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது