Advertisement

Main Ad

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் கார் , லொறி நேருக்கு நேர் மோதி விபத்து

rahman mohamed
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (26)  காலை 8 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தின் போது இருவர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னல பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த லொறியொன்றுடன்  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கார், நேருக்கு நேர் மோதியதாகலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.