Advertisement

Main Ad

கருணை மனங்கள் நிரப்பிய வீடு வீடாக நிதி சேகரிப்பு!

gfgfgfr 
RAHMAN MOHAMED
அலுத்கம, பேருவல பிரதேசங்களில் இனவாத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக புத்தளம் மொஹிதீன் ஜும்மா (பெரியபள்ளி)யினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீடு வீடாக நிதி சேகரிப்பு’, 2014.06.25 ஆம் திகதி மலை 4.30 மணி முதல் மஸ்ஜிதுல் பகாஹ் (வெட்டுக்குளம் பள்ளி)யில் இருந்து ஆரம்பமானது.

இந் நிதி சேகரிப்பை முன்னெடுத்து நடத்திய வாலிபக் குழுக்களின் உறுப்பினர்களுடன் காஸிமிய்யா அரபுக் கல்லூரி, ஒக்சோன் கல்வி நிலையம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் உட்பட 70 பேர் இப் பணிக்காக வருகைத் தந்திருந்தனர்.

காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் அ.இ.ஜ.உ. புத்தளம் மாவட்ட கிளையின் தலைவருமாகிய அப்துல்லா மஹ்மூத் ஆலிம் வருகை தந்து வாலிபர்களுக்கு ஆலோசனை; வழிகாட்டல்களை வழங்கினார்.
புத்தளம் நகரை 17 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேவையான எண்ணிக்கை தொண்டர்களும் இலக்கமிடப்பட்ட உண்டியல் போத்தல்களும் விநியோகிக்கப்பட்டது. இவர்கள் செல்ல வேண்டிய பாதைகளைக் காட்டும் வரைபட விவரமும்வழங்கப்பட்டது.

மூன்று முச்சக்கர வண்டிகளில் ஒலிபெருக்கி மூலம் வீதி அறிவித்தல் செய்யப்பட்டது. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்றவுடன் தாய்மார்கள், வயோதிபர்கள் என எல்லா வயதினரும் தாராள மனதுடன் தம்மால் இயன்ற தொகை நிதியை அன்பளிப்பு செய்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்ததோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.

மாலை 6.30 மணியளவில் நிதி சேகரிப்பு நிறைவடைந்தது. ரூபா 255,870.00 சேகரிக்கப்பட்டது.

இந் நிதி சேகரிப்புப் பணியை முன்னின்று நடத்திய வாலிபக் குழுக்களையும் தன்னார்வத் தொண்டர்களையும் நிதியினை வழங்கிய ஊர் மக்களையும் பாராட்டி நன்றி  தெரிவித்தார்.