சுந்தர்.சி. இயக்கிய ‘ரெண்டு’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், ரம்யாகிருஷ்ணன் நடிக்கும் ‘வம்சம்’ மற்றும் ‘தென்றல்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ஏ.சி.முரளிமோகன்.
ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளவர் இவர், இன்று காலை சென்னையில் காலமானார்.
புரசைவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
