Advertisement

Main Ad

சமூக இணையதளத்தில் ஆபாச படம் வெளியானதால் கொல்கத்தா மாணவி தற்கொலை


சமூக இணையதளத்தில் ஆபாச படம் வெளியானதால் கொல்கத்தா மாணவி தற்கொலை

சமூக இணையதளத்தில் தனது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக ஆண் நண்பர் வெளியிட்டதால் 11-ம் வகுப்பு படித்து வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கொல்கத்தாவில் உள்ள பர்னாஸ்ரீ பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சமூக இணைய தளத்தில் தனது ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது உண்மையில் அவர் படம் இல்லை. அவரது படத்தை மார்பிங் முறையில் மாற்றம் செய்து அவரது ஆண் நண்பன் பைசல் இம்ரான்கான் வெளியிட்டுள்ளது அவருக்கு தெரிய வந்தது. அத்துடன் அந்த மாணவியின் போன் நம்பரையும் அதில் குறிப்பிட்டுள்ளான்.

இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் முன் அந்த மாணவி 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அக்கடிதத்தை போலீசார் கைப்பற்றி, தற்கொலைக்கு காரணமான கைசல் இம்ரான் கான் மற்றும் அவருக்கு உதவிய தீபக் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.