Advertisement

Main Ad

தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் கலையப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக் - எல பள்ளிவாயல் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  சடலம் (2014 05 10) இரவு நேரம் பொலீஸாரால் மீட்கப்பட்டது.  இவ்வாறு கொலையுண்டவர் இனம் காணப்பட்டு;ள்ளதாகவும் அவர் சித்தி சாதுனா என்ற மூதாட்டி எனவும்  பொலீஸார் தெரிவித்தனர்.  பள்ளிவாயலால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த இவர் அயலவர்களுடன் மிக இணக்கமாக வாழ்ந்துள்ளார். சனிக் கிழமை காலை முதல் இவர் நடமாடாத காரணத்தால் அயலவர்கள் மாலையில் அவரைத் தேடி உள்ளனர். வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் கூறை வழியாக பார்த்த போது இவர் இரத்த வெள்ளத்தில் மரணித்திருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பொலீஸாருக்கு அறிவித்த பின் விசாரணைகள் ஆரம்பமாகின.   கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே  (11.5.2014) மரண விசாரணையை நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை நடத்தி அறிக்கை இடுமாறு உத்தரவிட்டார்.  கண்டி வைத்திய சாலையில் இன்று பிரேத பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.   இம் மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன் ஆடைகள் களையப்பட்டிருந்ததால் இவர் பாலியல் வல்லுரவிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதைப் பற்றி பிரேத பரிசோதனையின் பின் தெரிய வரும் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.  கொலையாளியை கைது செய்வதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.