வாஷிங்டன்: பிரசவத்தின் போது கைகளை கோர்த்தபடி தாயின் கர்ப்ப பையில் இருந்த இரட்டைகுழந்தைகளை டாக்டர்கள் ஆச்சிரியமாக பார்த்தனர். அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் பில் போத் மற்றும் சாரா டிஸ்டில்தவெயிட் ஆவர். சாரா கர்ப்பமாக இருந்தார். கடந்த அன்னையர் தினத்தையொட்டி அவர் குழந்தை பெற்று கொள்ள விரும்பினார். இதை தொடர்ந்து நேற்று டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

அவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அதிசயம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை கோர்த்தபடி பிறந்து உள்ளது. குழந்தைகளுக்கு ஜில்லியன் மற்றும் ஜின்னா என பெயரிட்டு உள்ளனர். இது குறித்து சாரா கூறும் போது இது  அன்னையர் தினத்தில் எனக்கு கிடைத்த நல்ல பரிசுப் பொருள். நான் இதை நம்ப வில்லை, இது அதிசயமானது இருவரும் கைகோர்த்தபடி பிறந்து உள்ளனர். இருவரும் நல்ல நணபர்களாக இருப்பார்கள் என கூறினார்.