Advertisement

Main Ad

மத விவகாரங்கள் குறித்து ஆராய விசேட பொலிஸ் பிரிவு - மதப் பிரிச்சினையை ஏற்படுத்தும்

மத விவகாரங்கள் குறித்து ஆராய விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளமையானது உகந்த செயற்பாடு அல்ல என அஸ்கிரிய பீடத்தின் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். 
புத்தசாசன அமைச்சின் கீழ் இந்த விசேட பிரிவு அமைக்கப்பட்டுள்ளமை, இலங்கையில் மதப் பிரிச்சினையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார். 
கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தம்மானந்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி இவ் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. adt