Advertisement

Main Ad

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மாகாண அமைச்சர் மன்சூர் அவர்கள் திடீர் விஜயம்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மாகாண அமைச்சர் மன்சூர் அவர்கள் திடீர் விஜயம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாகாண, சுதேச வைத்திய அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலைகளின் தேவைகள், குறைகளை அறிந்து கொள்வதோடு, நோயாளர்களின் குறைகள் பற்றியும், அவர்களது நோய் தொடர்பாகவும் நலம் விசாரித்து வருகின்றார்.

இந்த வகையில் நேற்று கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு அவரது குழுவினருடன் சென்று வைத்தியசாலைகளின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளையும், நோயாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் விரைவில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் சேவகன்'s photo.
மக்கள் சேவகன்'s photo.