Advertisement

Main Ad

கல்முனை தொகுதியின் ஶ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (22) மாலை, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தலைவர் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

.
இச்சந்திப்பில் சமகால தேசிய அரசியல் நிலவரம், மாநகர சபையின் நிலைப்பாடு மற்றும் பிறவிடயங்கள் பற்றி விரிவாக மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ பைசல் காசிம், கௌரவ எம். எஸ். தௌபீக், கௌரவ எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும், சமாதான தூதுவருமான கௌரவ. ஏ.எம். ஜெமீல், முதல்வர் கௌரவ எம்.நிஸாம் காரியப்பர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஶ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளையில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நியமனம் பற்றி ஆராயப்படுமென ஊகங்கள் அனுமானங்கள் தெரிவித்திருந்த போதிலும், இங்கே ஏனைய விடயங்கள் பற்றியே முக்கியமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.