Advertisement

Main Ad

இரண்டு இலட்சம் ரூபாவை ஏழைகளுக்கேவழங்குவேன்:என்கிறார் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாகிப்

சாய்ந்தமருது உங்களை வரவேற்கிறது“ 
தொடர்பில்முன்னாள்மேயரானசிராஸ் மீராசாகிப் மேலும் ஒரு விளக்கத்தை வழங்கியுள்ளார்.


கேள்வி:- சாய்ந்தமருது வரவேற்று வளைவில் வரவேற்பு வாசகம் பொறிக்கப்படுவது தொடர்பில் உங்கள் காலத்தில் கல்முனை மாநகர சபையில் ஆராயப்படவில்லை என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரகத்துல்லாஹ் தெரிவித்துள்ளாரே?
பதில்:- சாய்ந்தமருது வரவேற்று வளைவில் வரவேற்பு வாசகம் பொறிக்கப்படுவது தொடர்பில் எனது காலத்தில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் இது தொடர்பில் கல்முனை மாநகர சபை கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அந்தத் தேவையும் இல்லை. ஆலோசனை சபைக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு அதன் அடிப்படையிலேயே கல்முனை அமானா வங்கியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது..
கேள்வி:- இந்த சின்ன விடயத்தை அமானா வங்கியிடம் ஒப்படைக்கத் தேவையில்லை. சாய்ந்தமருது வரவேற்று வளைவில் வரவேற்பு வாசகம் பொறிக்கப்படுவதற்காக ஏற்படக் கூடிய செலவான 2 இலட்சம் ரூபாவை நீங்கள் நினைத்தால் உங்கள் சொந்தப் பணத்தில் செலவிட்டு விடயத்தை முடித்திருக்கலாம் என பலரும் கூறுகிறார்களே?
பதில்:- அந்தப் பணத்தை ஏழைகளுக்கு மட்டுமே என்னால் கொடுத்திருக்க முடியும். இதற்குச் செலவிட வேண்டிய தேவை இல்லை. அமானா வங்கியிடம் இந்தப் ஒப்படைத்ததன் மூலம் அதனை அவர்கள் நிறைவேற்றி தங்களது வங்கியின் அனுசரணையையும் ஒரு சிறு விளம்பரமாக அந்த வளைவில் குறிப்பிடலாம் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு நடந்து கொண்டேன்.