Advertisement

Main Ad

கல்முனையில் கொள்ளை சம்பவம் அதிகரிப்பு;

கல்முனை பிரதேசத்தில் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
கல்முனைப் பிரதேசத்தில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய இங்குள்ள கிராமங்களில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களையும் மற்றும் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டிகளையும் கொள்ளையர்கள் திருடி வருகின்றனர்.
 
இரவு வேளையில் வீடுகளுக்குள்  நுழையும் திருடர்கள் அங்குள்ள வீட்டு உபகரணங்கள், அலுமினியப்பொருட்கள் பாத்திரங்கள், துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை களவாடிச்செல்கின்றனர்.
 
மேலும் அவசர தேவையின் நிமித்தம் பொது இடங்களில் நிறுத்தி விட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றின் உதிரிப்பாகங்களையும்   திருடிச் செல்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது