
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்
வருடாந்த ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும் இறக்காம பிரதேச வாங்காமம்
தோட்டத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்
தலைவர் எம்.எம்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஷேட
விருந்தினராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர
ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்,
சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட முகாமையாளர் அல்-ஹாஜ் ஏ.சீ.ஏ.நஜீம்,
சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திட்ட
முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்
ஏ.ஆர்.எம்.பர்ஹான் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
கலந்து கொண்டனர்.
இவ்வருடத்திற்கான சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்;த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவின்போது பின்வருவோர்
ஏகமனதாக சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: யூ.எல்.ஜஃபர், செயலாளர்:
எம்.வீ.எம்.அன்லைஸ், பொருளாளர்: ஏ.எம்.எம்.நஸீர், உபதலைவர்:
ஏ.எம்.காலிதீன், உபசெயலாளர்:எம்.ஐ.எம்.அன்சார் ஆகியோர் தெரிவு
செய்யப்பட்டனர்.
இதன்போது சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான்,
திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் ஆகியோர் திருமண பந்தத்தில்
இணைந்ததையிட்டு உத்தியோகத்தர்களால் அன்பளிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








