Advertisement

Main Ad

விமர்சியாக நடைபெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா இன்று (24) சனிக்கிழமை பல்கலைக்கழக, ஒலுவில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சி முகம்மட் இஷாக் தலைமையில் 2.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் முக்கிய பேச்சாளராக திறைசேரியின் செயலாளரும், நிதி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர கலந்து கொண்டார்.
முதல் நிகழ்வாக சட்டத்துறையில் சாதனைபடைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி மற்றும் பாயிஸ் முஸ்தபா ஆகியோருக்கு விசேட கலாநிதி பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற 441 மாணவர்கள் அவரவர் கற்ற பிரிவுகளில் இருந்து பட்டங்களை பெற்றனர். 
இதில் 2011ஃ2012 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பீடத்ததில் வணிக நிர்வாக முதுகலை பட்டத்தை 09 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 2007ஃ2008 கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் (விசேடம்) 03 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து விஞ்ஞானத்தில் 2008ஃ2009 கல்வி ஆண்டில் இளங்கலை பட்டத்தை 31 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2007ஃ2008 கல்வி ஆண்டில் விசேட பட்டத்தை 45 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2008ஃ2009 கல்வி ஆண்டில் 89 பேரும் அரபு இஸ்லாமிய பீடத்தில் இருந்து விசேட பட்டத்தை 2007ஃ2008 கல்வி ஆண்டில் 24 பேரும் 2008ஃ2009 கல்வி ஆண்டில் பட்டத்தை 83 பேரும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து 2007ஃ2008 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பட்டத்தை 65 பேரும் 2008ஃ2009 கல்வி ஆண்டில் வர்த்தக பட்டத்தை 41 பேரும் 2008ஃ2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 01 வரும் 2008ஃ2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 52 பேரும் பெற்றனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து சிறந்த மாணவியாக மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஞாபகார்த்த பதக்கத்தை எம்.என்.பஸ்லுல் ஹஸ்னாவும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த பதக்கத்தை எம்.ஆர்.றாசியாவும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து அல்-ஹாஜ் ஏ.எல்.இப்றாலெப்பை ஞாபகார்த்த பதக்கத்தை ஏ.ஆர்.பாத்திமா தபாணியும் அல்-ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த பதக்கத்தை ஜீ.எம்.எம். பாத்திமா ரக்சானாவும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி அவர்களால் ஒரு தொகுதி நூல்கள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்களுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மாயில் அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், பட்டதாரி மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்;.
நிகழ்வுகள் அனைத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மாயிலின் வழிகாட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.