Advertisement

Main Ad

S.S.P. அஜித் ரோகண Firing : முதுகெலும்பு இல்லாத போலீசாருடன் வேலை செய்வது வெறுத்து விட்டது !! முதுகெலும்பு இல்லாத பொலிஸாரினால் தினமும் பிரச்சனை ! மனம் வருந்துகிறார் அஜீத்


முதுகெலும்பு பலமற்ற பொலிஸ் அதிகாரிகளால் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு நாளுக்கு நாள் அழிவு ஏற்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ajithஅம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படும் போது அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொலிஸாரை பணி இடைநீக்கம் செய்யுமாறு தான், பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் ஒன்று நடைபெற்ற பின்னர் சட்டத்தை செயற்படுத்தும் போது அரசியல்வாதிகள், சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தும் அதிகாரிகளை சீருடைகளை கழற்றி விட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடும் நிலைமை ஏற்படுகிறது.
அம்பாந்தோட்டை சம்பவம் நடைபெற்ற போது பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்தனர்.
இரண்டு அல்லது மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தால், இப்படியான சம்பவங்கள் நடக்காது. நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னர் சட்டத்தை நீதிமன்றம் செயற்படுத்தும்.
முதுகெலும்பில்லாத பொலிஸ் அதிகாரிகளினால் தினமும் ஏற்படும் பிரச்சினையால் எனக்கு இந்த தொழில் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.