மனித முகம் கொண்ட ஆடு ஒன்று சவுதி அரேபியாவில் பிறந்தது. மிகவும்
அதிசயத்தக்க வகையில் காணப்பட்ட இந்த ஆடு பிறந்து சிலமணி நேரங்களில்
இறந்துவிட்டது.
சவுதி அரேபியா நாட்டில் southern town of Samita என்ற இடத்தில் ஒரு ஆட்டுப்பண்ணையில் ஒரு ஆடு ஒன்பது மாத கர்ப்பமாக இருந்தது.
சாதாரணமாக ஒரு ஆடு ஐந்து மாதத்தில் குட்டி போட்டுவிடும். ஆனால் இந்த ஆடு
ஒன்பது மாதங்கள் ஆனபின்னும் குட்டி போடாததால் இந்த பண்ணையின் உரிமையாளர்
Abu Abdullah என்பவர் விலங்குகள் மருத்துவரிடம் சென்று இந்த ஆட்டை
காண்பித்துள்ளார்.
விலங்குகள் மருத்துவரும் ஆட்டை சோதனை செய்து வேறு எந்த வித்தியாசமான
அறிகுறிகளும் தெரியவில்லை என்றும், ஒருசில ஆடுகள் தாமதமாக குட்டி போடுவது
சகஜம்தான் என்றும் கூறி அனுப்பிவிட்டார். நேற்று அந்த ஆடு குட்டி ஒன்றை
ஈன்றது. அந்த குட்டியை பார்த்த Abu Abdullah, அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
காரணம் அந்த ஆட்டுக்குட்டிக்கு மனிதனைப் போன்ற முகம் இருந்தது.
மனிதனை போலவே வாய், மூக்கு, கண் ஆகியவை இருந்ததால், அந்த பண்ணையில் வேலை
செய்யும் தொழிலாளர்கள் முதல் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிறந்த
சிலமணி நேரத்தில் அந்த ஆடு இறந்துவிட்டது அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்திவிட்டது.
